நிஸான் அர்பன் எஸ்யூவி மற்றும் டெரானோ கார்கள் அறிமுகம்

சீனாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களைத் தொடர்ந்து ஹைபிரிட் கார்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. அதுவும் ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் என்றால் வாடிக்கையாளர்கள் பாய்ந்து வந்து வாங்குகிறார்களாம். எனவே புதிய ஹைபிரிட் கார் மாடல்களை அங்கே வெளியிடுவதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்தியாவிலேயே விலை குறைவான பென்ஸ் கார் அறிமுகம்!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அறிவித்தப்படி அதன் சி.எல்.ஏ எலெக்ட்ரிக் (CLA Electric) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.55 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கார் ஆனது, இந்தியாவில் விலை குறைவான பென்ஸ் கார் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் காராக கொண்டுவரப்பட்டுள்ள இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களின் கைகளால் அசெம்பிள் ஆகும் ரேஞ்ச் ரோவர் அறிமுகம்!

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் அதன் பிரபலமான ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் (Assemble) செய்து விற்பனை செய்ய கடந்த சில வருடங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. அதாவது, ரேஞ்ச் ரோவர் கார்களை பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து, இந்தியாவில் முழு காராக அசெம்பிள் செய்து விற்பனை செய்வதாகும்.

கார் சர்வீஸ் சென்டர்களை போட்டி போட்டு அமைத்துவரும் கியா!

தென்கொரியாவை சேர்ந்த கியா (Kia) நிறுவனம் இந்தியா முழுவதும் அமைத்துவரும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையில் வெற்றிக்கரமாக 500 என்கிற பெரிய எண்ணிக்கையை கடந்துள்ளது. கியா கார்களை இந்திய மக்கள் வாங்குவதற்கு ஊக்கப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ள இந்த செய்தி குறித்த விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

ஆம்பியர் மேக்னஸ் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

இந்தியாவில் குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் சில நிறுவனங்களில் கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டியும் ஒன்றாக இருக்கிறது. ஆம்பியர் பிராண்டின் கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் குறைவான விலையிலேயே தொடர்ந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிடுவோம் எனவும் சமீபத்தில் இந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிதாக ஸ்கிராம் 450 பைக்கை உருவாக்கி வரும் ராயல் என்ஃபீல்டு

450 இன்ஜின் பிளாட்ஃபார்மில் தற்போது ஹிமாலயன் 450 மற்றும் கொரில்லா 450 ஆகிய இரண்டு பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. விரைவில் இதில் மூன்றாவது பைக் ஒன்றும் இணையவிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய பைக்கைக் குறித்து பேசுவதற்கு முன்னாள், ராயல் என்ஃபீல்டின் லைன்-அப்பில் இருக்கும் இன்ஜின் பிளாட்ஃபார்ம்களைப் புரிந்து கொண்டால், புதிய பைக் எந்த இடத்தில் பொருந்தும் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

51 வருடங்களுக்கு பின் இந்தியா வந்த பைக் பிராண்டின் 2வது பைக்

கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனத்தில் இருந்து நேற்று, ஏப்ரல் 23ஆம் தேதி இரு ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒன்று, யெஸ்டி (Yezdi) பிராண்டில் இருந்து யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர். மற்றொன்று, பிஎஸ்ஏ (BSA) பிராண்டில் இருந்து ஸ்க்ராம்ப்ளர் 650 (Scrambler 650) ஆகும். இதில், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் ஆனது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடலின் அப்கிரேட் வெர்சன் ஆகும். அதுவே, பிஎஸ்ஏ ஸ்க்ராம்ப்ளர் 650 ஆனது முற்றிலும் புதிய பைக் ஆகும்.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்

இந்தியாவில் டிவிஎஸ் மற்றும் பஜாஜுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய எலெகட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக இருந்து வரும் ஏத்தர் எனர்ஜி, 6 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்யத் தொடங்கியதில் இருந்து தற்போது வரை சுமார் 6,04,497 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது அந்நிறுவனம்.
Advertisement

டெஸ்லா மாடல் Y L: சிறப்பு அம்சங்கள், விலை ஒப்பீடு!

இந்தியாவில் Tesla Model Y L, Model Y மற்றும் Model Y Long Range மாடல்களின் விலை, அம்சங்கள், ரேஞ்ச் மற்றும் செயல்திறன் ஒப்பீடு. Compare Tesla Model Y L's price, specs, and features against Model Y and Long Range variants in India.

RE பைக்குகளின் அதே 2 லட்ச ரூபாயில் புதிய டிரையம்ப் பைக்!

யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் (Yezdi Scrambler) பைக் புதிய தோற்றத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த யெஸ்டி பைக் ஏற்கனவே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். தற்போது கூடுதல் அழகாகி உள்ளது. ரூ.2 லட்சத்தில் இருந்து விலையை கொண்டுள்ள புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் டிசைன், என்ஜின் மற்றும் வசதிகளில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பைக் டாக்ஸிகளுக்கு தடை?

இந்தியாவின் பெரு நகரங்களில், பைக் டாக்ஸி (Bike Taxi) சேவைகளுக்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆட்டோ (Auto), கேப் (Cab) ஆகியவற்றை விட கட்டணம் மிகவும் குறைவு என்பதுதான் இதற்கு காரணம். ஆனால் பைக் டாக்ஸியால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ மற்றும் கேப் டிரைவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

4.5 மீ மேலான எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனை செய்த மஹிந்திரா

இந்தியாவில் தற்போது மற்ற எந்தவித பாடி வகைகளை விடவும் எஸ்யூவி வகை கார்களுக்குத் தான் வாடிக்கையாளர்களிடம் அதிக மவுசு இருக்கிறது. 2020ல் முன்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கி தற்போது எஸ்யூவி என்ற பெயர் கொண்ட வாகனங்களையே அதிகளவிலான மக்கள் வாங்க விரும்புகிறார்கள். நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் மனநிலை மாற்றத்திற்கு ஏற்ப, மைக்ரோ எஸ்யூவி முதல், ஃபுல்-சைஸ் எஸ்யூவி வரை அனைத்து அளவுகளிலும் வகை வகையான எஸ்யூவிக்களை விற்பனை செய்து வருகின்றன.
Advertisement

20 வருஷம் போனதே தெரியல...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து லரும் டூவீலர் நிறுவனங்களில் ஒன்று சுஸுகி (Suzuki). ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது 2 தசாப்தங்களை நிறைவு செய்துள்ளது. சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2006ம் ஆண்டு நுழைந்தது.

நேற்று அறிமுகமான புதிய பிஎம்டபிள்யூ பைக் எப்படி இருக்கு?

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்தில் இருந்து புதியதாக எஃப் 450 ஜிஎஸ் (F 450 GS) மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த பைக்கிற்கு ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் ஹிமாலயன் 450 (Himalayan 450) மற்றும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் எஸ் (KTM 390 Adventure S) உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. அவற்றுடன் ஒப்பிடுகையில், புதிய பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் எந்த அளவிற்கு சிறந்தது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எவ்வளவு போராடி பார்த்தும் முடியல... கடினமான முடிவில் ஹோண்டா!

ஹோண்டா மோட்டார் (Honda Motor) நிறுவனம் தென் கொரியாவில் இருந்து மூட்டை முடிச்சுகளை கட்டி நடையை கட்ட போவதாக அறிவித்துள்ளது. இதன்படி, ஆசியாவிலேயே மிகவும் போட்டி மிகுந்த கார் சந்தைகளுள் ஒன்றான தென் கொரியாவில் இருந்து சுமார் 23 வருட வரலாற்றை முடித்துக் கொண்டு ஹோண்டா நிறுவனம் வெளியேற உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

வெஸ்பா டெக் 80th சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் மாடல் அறிமுகம்

இத்தாலியைச் சேர்ந்த ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான வெஸ்பா, தங்களுடைய 80ம் ஆண்டைக் கொண்டாட 'டெக் 80th' (Tech 80th) என்ற புதிய சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மாடர்னான பிளாட்ஃபார்ம் மற்றும் அம்சங்களுடன், முதன் முதலில் வெளியிடப்பட்ட ஒரிஜினில் வெஸ்பா ஸ்கூட்டர் டிசைன் அம்சங்களுடன் இந்தப் புதிய சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்த தகவல்களை விரிவாக இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
Advertisement

பைக் ஓட்டுற எல்லாருக்கும் இந்த விஷயம் கண்டிப்பா தெரியனும்!

சாலையில் நண்பர்களுடன் பைக் ரைடிங் செல்லும் போது முன்னாள் செல்லும் ரைடர் பின்னால் வரும் ரைடருக்கு கை மூலம் சில சிக்னல்களை தருவார்கள். இப்படியாக அவர் தரும் ஒவ்வொரு சிக்னலுக்கும் என்ன அர்த்தம் என்று இன்றும் பலருக்கு சரியாக தெரிவதில்லை. இந்த சிக்னல்கள் மூலம் பின்னால் வரும் ரயிலுக்கு எப்படி தகவல்களை தெரிவிக்கலாம் என்ற விரிவான விவரத்தை காணலாம் வாருங்கள்.

பிஎம்வி F 450 GS அட்வென்சர் பைக் இந்தியாவில் வெளியானது

நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பிறகு இந்தியாவில் புதிய 'F 450 GS' அட்வென்சர் பைக்கை வெளியிட்டுள்ளது பிஎம்வி (BMW). முதன் முதலாக 2024ம் ஆண்டு EICMA நிகழ்விலேயே இந்த பைக்கின் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். அப்போதே இதனை இந்தியாவிலும் வெளியிடத் திட்டங்கள் இருப்பதாகத் தகவல் வெளியானது. அதேபோல் தற்போது இந்தியாவில் இந்தப் புதிய அட்வென்சர் பைக் வெளியாகியிருக்கிறது.

மிடில்-கிளாஸ் மக்களும் வாங்கக்கூடிய புதிய பென்ஸ் கார்!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக சி.எல்.ஏ எலெக்ட்ரிக் (CLA Electric) காரை ஏப்ரல் 24ஆம் தேதியான நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் எலெக்ட்ரிக் கார் அறிமுகங்களுள் ஒன்றான மெர்சிடிஸ் சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரை பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், விலைகள் அறிவிக்கப்பட்டு கார் நாளை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மாருதி சுஸுகிக்கு ஃபேக்ட்ரி நாலு இருந்தும் பத்தல...!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 23.4 லட்சம் கார்களை உற்பத்தி செய்து அசத்தி உள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2026 மார்ச் வரையிலான 2025-26ஆம் நிதியாண்டில் இத்தனை லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ள நிலையில், மாருதி சுஸுகி ஒரு நிதியாண்டில் இந்த அளவிற்கு அதிகமான கார்களை உற்பத்தி செய்தது இல்லை.
Advertisement

யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350 பைக் அப்டேட் செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்கிராம்பிளர் 350 (Scrambler 350) பைக்கை அப்டேட் செய்துள்ளது யெஸ்டி (Yezdi). இதுவும் மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாகவே செயல்பட்டு வருகிறது. இந்த கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தான் தற்போது ஜாவா, யெஸ்டி மற்றும் BSA ஆகிய மூன்று கிளாஸியான பிராண்டுகளும் உள்ளன.

BSA ஸ்கிராம்பிளர் 650 பைக் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் புத்தம் புதிய 'ஸ்கிராம்பிளர் 650' (Scrambler 650) பைக்கை வெளியிட்டுள்ளது BSA. மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக BSA உள்ளது. ஏற்கனவே 'கோல்டு ஸ்டார் 650' (Gold Star 650) என்ற பைக் BSA பைக் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இரண்டாவது பைக் மாடலாக இந்த ஸ்கிராம்பிளர் 650 தற்போது வெளியாகியுள்ளது.

70 கிமீ மைலேஜ்! ஆக்டிவா, ஜூபிடரை விட குறைவான விலையில்...

இந்தியாவில் ஸ்கூட்டர் வாங்கும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) போன்ற ஒரு சில தயாரிப்புகளுக்குதான் அதிக முன்னுரிமை கொடுக்கின்றனர். ஆனால் இவற்றை தாண்டி, இன்னும் ஏராளமான ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் கிடைக்கின்றன.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு...

ரைடிங் செல்ல விரும்புபவர்கள் காரில் செல்வதை விட பைக்கில் தான் அதிகம் செல்ல விரும்புவர். சிலு சிலு வென வரும் காற்று, சிறிய சிறிய இடங்களிலும் பயணிக்கும் வாய்ப்பு என அனைத்தையும் தாண்டி பைக்கில் தான் த்ரில் அதிகம்.புதிதாக பைக் வாங்குபவர்கள் தாங்களுக்கான பைக்கை எப்படி தேர்ந்தேடுக்க வேண்டும். பைக்கில் எவ்வாறு பாதுகாப்பாக பயணிக்க வேண்டும், என்பது குறித்த சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம்.

Advertisement

வின்ஃபாஸ்ட் லிமோ கிரீன் எலெக்ட்ரிக் கார் வெளியீடு விரைவில்

MPV 7 எலெக்ட்ரிக் காரை ஏப்ரல் 15ம் தேதியன்று இந்தியாவில் வெளியிட்டது வின்ஃபாஸ்ட். வியட்நாமைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான இந்த வின்ஃபாஸ்ட், கடந்தாண்டு முதல் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யத் தொடங்கியது. கடந்த ஆண்டு VF 6 மற்றும் VF 7 ஆகிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிட்ட நிலையில், இந்தியாவில் தங்களது மூன்றாவது எலெக்ட்ரிக் காராக MPV 7-ஐ சமீபத்தில் வெளியிட்டது.