டொயோட்டா ஹைலக்ஸில் டீசல் மைல்டு ஹைபிரிட் பவர்ட்ரெயின்

கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் 9ம் தலைமுறை ஹைலக்ஸ் (Hilux) பிக்-அப் டிரக்குகளை விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. சமீபத்தில் கூட போலாந்தில் இந்தப் புதிய மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவிலும் ஹைலக்ஸ் ட்ரக் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் மேம்படுத்தப்பட்ட மாடலே இங்கேயும் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 9ம் தலைமுறை ஹைலக்ஸ் மாடலின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

புது சிம்பிள் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்

சிம்பிள் எனர்ஜி (Simple Energy), பெங்களூருவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் (Start-up) நிறுவனம். சிம்பிள் ஒன் என்கிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மூலமாக மார்க்கெட்டில் கவனத்தை பெற்ற சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் புதியதாக 'அல்ட்ரா' (Ultra) என்கிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23 ஓட்டு போடும் நாளில் விற்பனைக்கு வரும் 2 புதிய பைக்

புதிய 2026-27ஆம் நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் முடியும் தருவாயில் உள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் புதியதாக இரு மோட்டார்சைக்கிள்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த இரு பைக்குகளும் சரியாக தமிழ்நாடு சட்ட பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ள ஏப்ரல் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன.

டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் புது BMW பைக் இதுதான்!

பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் அதன் எஃப்450 ஜிஎஸ் (F450 GS) மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை இந்தியாவில் துவங்கியுள்ளது. வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி, தமிழ்நாடு சட்ட பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளின் போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக தற்போது இந்த பிஎம்டபிள்யூ பைக்கிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன.
Advertisement

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

மகப்பேறு காலங்களில் வாகனம் ஓட்டுவது என்பது அவர் அவர்களின் விருப்பம் சார்ந்தது. அதில் உள்ள ரிஸ்க்களை அவர்களால் சமாளிக்க முடியும் என்றால் அவர்கள் வாகனம் ஓட்டலாம். எனினும் அவர்களுக்கு பயணித்தின் போது பல்வேறு ஆபத்துக்கள் இருக்கிறது. மிகவும் தவிர்க்க முடியாத காரணத்தை தவிர மற்ற நேரங்களில் மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கலாம்.

கொளுத்தும் வெயிலுக்கு இனிமையான கூலிங்கை தரும் 7 கார்கள்!

தமிழ்நாடு முழுக்க கோடை வெயில் (Summer Heat) கொளுத்துகிறது. இந்த சூழலில், காரில் ஏசி (Air Conditioner) வசதி இல்லை என்றால் காருக்குள் அமரவே முடியாது. ஏனெனில், கார்களின் உடலமைப்பானது உலோகங்களால் செய்யப்படுகிறது. இந்திய கோடைக்காலம் ஆனது சில இடங்களில் 45 டிகிரி செல்சியஸ் வரையில் கூட செல்லக்கூடியது என்பதால், இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் கார் நிறுவனங்கள் தங்களது கார்களில் சிறந்த ஏசி வசதிகளை வழங்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன. அந்த வகையில் சிறந்த ஏசி மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் (Climate Control) சிஸ்டத்துடன் குறைந்த விலையில் கிடைக்கும் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி தெரியாத பல விஷயங்கள்

பொதுவாக வாகனங்களில் பல்வேறு விதமான லைட்டுகள் பயன்படுத்துவார்கள். குறிப்பாக ஹெட்லைட், டெயில் லைட், சிக்னல் லைட், கார்களின் உட்புறத்தில் பொருத்தப்படும் லைட் என பல்வேறு இடங்களில் லைட்கள் பொருத்தப்படுகிறது.
இதில் ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு விதமாக ஹெட்லைட் பொருத்தப்படுகிறது. சில லைட்கள் பிரகாசமாகவும், சில லைட்கள் மங்களாகவும் எரியும்.

புது கார்களின் விலை ரூ.2.50 லட்சம் குறைய போகுது...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசுகளும் விரும்புகின்றன. பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை (Air Pollution) குறைக்க வேண்டும் என்பதுதான் இதற்கான முக்கிய காரணம்.
Advertisement

இந்தியாவில் வேலையை காட்ட ஆரம்பித்த சீன கார் கம்பெனி!

பி.ஒய்.டி இந்தியா (BYD India) நிறுவனம் அதன் கார்களின் விலைகளை வருகிற 2026 மே மாதம் முதல் 3% அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விலைகள் வெகுவாக அதிகமாக உள்ள நிலையில், இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

உலகிலேயே அதிக மைலேஜ் குடுக்கும் ஸ்கூட்டர்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதமும் விதிவிலக்கு அல்ல.

புதிய சிம்பிள் அல்ட்ரா vs ஏத்தர் எனர்ஜியின் 450 அபெக்ஸ்!

சிம்பிள் எனர்ஜி (Simple Energy) நிறுவனத்தில் இருந்து புதியதாக அல்ட்ரா (Ultra) என்கிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த சிம்பிள் எனர்ஜியில் இருந்து ஏற்கனவே பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றை போல் இல்லாமல், புதிய சிம்பிள் அல்ட்ரா ஆனது விலைமிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக களமிறக்கப்பட்டுள்ளது.

தனி குடும்பமா பயணிப்பதற்கு மிகவும் கச்சிதமாக இருக்கும்...!

எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இது இந்தியாவில் மட்டுமில்ல, உலகளவிலும் இதே நிலைமை தான். இதனாலேயே பெரும்பாலான கார் நிறுவனங்கள் அடுத்தடுத்து புது, புது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில், விலை குறைவான கார்களுக்கே இங்கு சிறப்பான மார்க்கெட் உள்ளதால் அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட பல விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

டொயோட்டா யாரிஸ் காரிஸ் காம்பேட் எஸ்யூவி அப்டேட்

சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் 'யாரிஸ் கிராஸ்' (Yaris Cross) காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அப்டேட் செய்துள்ளது டொயோட்டா. இந்தப் பெயரைக் கேட்ட உடனேயே எங்கேயோ கேட்டது போல் இருக்கலாம். ஆம், 2021ம் ஆண்டு வரை யாரிஸ் (Yaris) என்ற பெயரில் செடான் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனை செய்து வந்தது டொயோட்டா. குறைவான வரவேற்பு காரணமாக இந்தியாவில் அதன் விற்பனை நிறுத்தப்பட்டது.

எங்கே பார்த்தாலும் ஓட போகும் சென்னை கம்பெனி கார்கள்!

ரெனால்ட் (Renault), உலகளவில் வரவேற்பை பெற்ற பிரெஞ்சு கார் நிறுவனம். ஆனால், இந்திய சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க ஆரம்பக் காலக்கட்டத்தில் இருந்தே போராடி வருகிறது. இருப்பினும், ரெனால்ட் நிறுவனத்தின் முயற்சிகள் ஓய்ந்த பாடில்லை. அந்த வரிசையில், தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்கள் அனைத்தையும் விரைவில் முற்றிலுமாக மாற்றியமைக்க ரெனால்ட் முடிவு செய்துள்ளது. அதாவது, அந்த அளவிற்கு இந்தியாவில் மிக பெரிய மாற்றத்தை ரெனால்ட் மேற்கொள்ள உள்ளது.

கிரெட்டாவுக்கு போட்டியாக ஃபோக்ஸ்வேகன் களமிறக்கிய புதிய கார்!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Volkswagen Taigun Facelift) கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட புதிய டைகுன் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்று 'எஸ்ஜே கார்ஸ் ரிவியூ' (SJ Cars Review) என்கிற யுடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

24-கேரட் தங்க தகடு உடன் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் 'ஓலா சோனா வீக்கெண்ட்' (Ola Sona Weekend) என்கிற பெயரில் குறுகிய காலத்திற்கான சலுகையை அறிவித்துள்ளது. ஏப்ரல் 18 மற்றும் 19 என இரண்டு நாட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள இந்த குறுகிய கால சலுகையின்படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிகப்பட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகள் உடன் பெறலாம்.
Advertisement

எம்ஜி கம்யூட் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது எம்ஜி மோட்டார். இந்த நிறுவனத்தின் விண்ட்ஸர் EV தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக 'கம்யூட்' (Commute) என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

யமஹா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏன் வாங்க வேண்டும்?

இந்திய எலெக்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தாமதமாக நுழைந்த நிறுவனங்களில் யமஹாவும் ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டது யமஹா. EC-06 என்ற பெயரில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது. இது முழுமையாக யமஹாவே வடிவமைத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எனக் கூற முடியாது.

35 கிமீ மைலேஜ்! மாருதியின் பிரபலமான கார் மொத்தமா மாற போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). தற்போதைய நிலையில் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி பலேனோ கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் சில காலத்திற்கு முன்பு வரை ஸ்கூட்டர் இரண்டாவது வாகனமாகவே கருத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி, முதன்மையான வாகனமாகவே ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதற்கு தனியே எந்தக் காரணமும் நாம் தேடத் தேவையில்லை. பைக்குகளை விட அனைத்து வகையும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனங்களாகவே ஸ்கூட்டர்கள் இருந்து வருகின்றன.
Advertisement

நெக்ஸான் இவி மார்க்கெட்டை மொத்த முடிக்க வரும் ஹூண்டாய் கார்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளத்தில் புதியதாக எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) கார் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இன்னும் பெயரிடப்படாத அந்த கார் தொடர்ச்சியாக பொது வெளியில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மீண்டும் அந்த புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஸான்டீஸ் 368 சிசி இன்ஜின் மேக்ஸி ஸ்கூட்டர் அப்டேட்

பெரிய இன்ஜின் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டர் மாடல்களுக்கு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மவுசு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் தான். எனவே, புதிய மேக்ஸி ஸ்கூட்டர்களை வெளியிடுவதுடன், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர் மாடல்களையும் பல்வேறு மேம்பட்ட வசதிகளுடன் நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஸான்டீஸ் (Zontes) நிறுவனம் தங்களுடைய மேக்ஸி ஸ்கூட்டர் மாடல்களை மேம்படுத்தியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 தான் மெயின் டார்க்கெட்!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் புதியதாக பொன்னேவில்லே 400 (Bonneville 400) என்கிற புதிய மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. பெயரில் '400' என இருந்தாலும் 350சிசி என்ஜினை கொண்ட பைக்காகவே புதிய பொன்னேவில்லே 400 களமிறக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த பைக்கின் விலை எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

டர்போ சார்ஜர் VS சூப்பர் சார்ஜர் எது பெஸ்ட்

டர்போசார்ஜர், சூப்பர் சார்ஜர் என்ற இரண்டு தொழிற்நுட்பங்கள் இன்ஜினில் பொருத்தப்படுகிறது. இரண்டிற்கும் என்ன வித்தியாசம், இரண்டிலும் உள்ள நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? இது குறித்த முழு விபரத்தைக் காணலாம் வாருங்கள்

Advertisement

50 ஆயிரம் கார்களை டெலிவரி செய்த டீலர்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் கடந்த 2025-26 நிதியாண்டில் (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31) ஒட்டுமொத்தமாக 24,22,713 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஒரு நிதியாண்டில் இவ்வளவு அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.