பால் உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. காலையில் குளிர்ந்த பாலில் உங்கள் முகத்தை கழுவினால் முகம் பொலிவாகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். மேலும், பால் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க உதவும். அழுக்கு மற்றும் பாக்டீரியாவை அகற்றவும் மற்றும் ஊட்டமளிக்கும் ஃபேஸ் மாஸ்க்காக நாள் முடிவில் சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தலாம்.
தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன மற்றும் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொற்றுக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன. தேனை சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என்பதை நாம் அனைவருமே கேள்விபட்டிருப்போம். ஆனால் தேனை இன்னும் பல வழிகளில் உட்கொள்வதன் மூலம் உடல் எடை இன்னும் சிறப்பாக குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.
பொதுவாக உடற்பயிற்சிகளை அந்தந்த வயதிற்கு ஏற்ப செய்ய வேண்டும். சிலர் 20-களில் செய்து வந்த உடற்பயிற்சிகளை, 30-களில் முயற்சிப்பார்கள். ஆனால் அது தவறு. அப்படி செய்யும் போது அதன் விளைவாக முதுகுப் பகுதியில் உள்ள டிஸ்க்குகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் 25 வயதை எட்டும் போது டிஸ்க்குகள் வறண்டு போகத் தொடங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மாம்பழ சீசனில் பலரும் மாம்பழத்தை தினமும் வாங்கி சுவைப்பார்கள். அதுவும் மாம்பழத்தை பல வழிகளை மக்கள் உண்பதுண்டு. சிலர் மாம்பழ மில்க் ஷேக், மாம்பழ ஸ்மூத்தி, சாலட் என்றும், சிலர் அப்படியே வெட்டி சாப்பிடுவதுண்டு. பலர் மாம்பழத்தை நேரம் காலம் பார்க்காமல் சாப்பிடுவார்கள். ஆனால் மாம்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.