5 பேர் பயணிக்க சூப்பரான காரை அப்கிரேட் செய்யும் ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் டைகுன் (Taigun) கார் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் (Facelift Upgrade) செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் அறிமுகத்திற்கு முன்னதாக சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் (Spy Images) இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

பெட்ரோல் பங்க் ஓனர்கள் பொழப்புல மண்ண அள்ளி போட்ட TVS பைக்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளில் (Entry-level Commuter Bikes) ஒன்று டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் (TVS Star City Plus). நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் பதிவு செய்துள்ளது.

5 ஸ்டார் ரேட்டிங் மட்டும் போதாது!

இந்தியாவில் வாகனம் வாங்கும் பலர் பாதுகாப்பு ரேட்டிங் குறித்த விபரங்களை ஆய்வு செய்கின்றரன். இந்தியாவிற்கு என பிரத்தியேகமாக பாரத் என்கேப் சோதனை நடத்தப்படுகிறது. இதில் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை சோதனை செய்து அதற்கான ரேட்டிங்களை பெறுகின்றனர். ஆனால் வாகனம் வாங்கும் போது ரேட்டிங்கை மட்டும் பார்க்காமல் அதில் வழங்கப்பட்டுள்ள AOP & COP தகவல்களையும் காண வேண்டும் எது என்ன AOP & COP ? விரிவாக காணலாம் வாருங்கள்.

ஏத்தரிடம் இருந்து இந்த மாதிரி முடிவுகளை தான் எதிர்பார்த்தோம்

ஏத்தர் எனர்ஜி (Ather Energy), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஆனது நமது தமிழ்நாட்டில் ஓசூரில் தான் உள்ளது. இந்த நிலையில், ஏத்தர் எனர்ஜியின் உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
Advertisement

விலை குறைவான 7 சீட்டர் காரின் டெலிவரி தொடங்கியது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் (2025 Renault Triber Facelift) கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடல், இந்தியா முழுவதும் உள்ள ரெனால்ட் டீலர்ஷிப்களுக்கு தற்போது வர தொடங்கியுள்ளது.

இந்த கார் இப்ப டீலர்ஷிப்களுக்கு வந்துடுச்சு!

ரெனல்ட் நிறுவனம் சமீபத்தில் தனது டிரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் இந்த காரின் டாப் வேரியன்டான எமோசன் வேரியன்ட் தற்போது டீலர்ஷிப்களுக்கு வர துவங்கியுள்ளது. இந்த காரை வாங்க நினைப்பவர்கள் உங்கள் அருகில் உள்ள டீலர் ஷிப்களில் சென் பார்க்கலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எலக்ட்ரிக் கார்களின் அருமை இன்னும் நிறைய பேருக்கு தெரியல!

எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் நாடு முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனாலேயே எலக்ட்ரிக் கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதன் மூலமாக பல்வேறு நன்மைகள் உள்ளன. அதாவது, சுற்றுச்சூழலை மாசடையாமல் தடுக்கலாம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்கலாம்.

100க்கு 81 பேர் இந்த கம்பெனி காரை தான் வாங்குறாங்க

இந்தியாவில் ஹைபிரிட் செக்மெண்ட் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் டொயோட்டா நிறுவனம் இந்த செக்மெண்டில் 81 சதவீத மார்கெட் பங்கை பிடித்துள்ளது. இதில் டொயோட்டா நிறுவனத்தின் ஹைகிராஸ் கார் தான் சிறப்பாக விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

கடவுள் நேரில்வர மாட்டார் இதுபோல ஆட்களை தான் அனுப்பி வைப்பார்

கார்களில் ஏர்பேக் (Airbag) வந்த பிறகு விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதனாலேயே கார்களில் குறைந்தப்பட்சம் 6 ஏர்பேக்குகளை ஆவது வழங்குமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஏர்பேக்குக்கு முன்பே பயணிகளின் பாதுகாப்புக்காக காரில் வழங்கப்பட்டுவரும் சீட்பெல்ட் (Seatbelt)-ஐ நம்மில் நிறைய பேர் முறையாக பயன்படுத்துவது இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இந்த கலர் கார் தான் அதிக மைலேஜ் தரும்

நீங்கள் ஒரு காரை வாங்க வேண்டும் என் முடிவு செய்தால் முதலில் மாடலை தேர்வு செய்வீர்கள், அதன் பிறகு அதன் வசதிகள், மற்றும் அம்சங்களை வைத்து நீங்கள் வேரியன்டை தேர்வு செய்வீர்கள் இறுதியாக நீங்கள் தேர்வு செய்வது காரின் கலர் தான். கார் கலரை தேர்வு செய்வதற்கு முன்பு அதன் பின்னால் உள்ள அறிவியல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

யாருக்கும் தெரியாமல் கமுக்கமா சாலையில் சென்ற புதிய டாடா கார்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பஞ்ச் (Punch) காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேட் வெர்சன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய மார்க்கெட்டில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கார்களுள் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் காரும் ஒன்றாகும். இந்த நிலையில், டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் சாலையில் காட்சியளித்துள்ளது.

யாருக்கும் தெரியாமல் இந்திய சாலையில் காட்சி தந்த சீன கார்!!

பிஒய்டி (BYD), உலகளவில் பிரபலமான சீன எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். குறிப்பாக, இந்திய மார்க்கெட்டில் நுழைந்த மிகவும் சில சீன எலக்ட்ரிக் கார் நிறுவனங்களுள் ஒன்று. மத்திய அரசின் போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியே பிஒய்டி எலக்ட்ரிக் காரை இந்தியாவில் விளம்பரப்படுத்தி உள்ளதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம்.
Advertisement

கம்மி விலையில் இவியை களம் இறக்கும் சீன நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனத்தை களம் இறக்கியுள்ள நிலையில் அதற்க ஆப்பு வைக்கும் வகையில் புதிய காரை களம் இறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நானோ மாதிரி குட்டி எலெக்ட்ரிக் காரை வெளியிட்ட ஹோண்டா!

ஹோண்டா நிறுவனம் நானோ கார் போன்ற குட்டி இவி கார் ஒன்றை முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் சலுகையுடன் குறைந்த விலையில் இந்த கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெட்ரோல் கார் தானே என்று சாதாரணமா நினைச்சுடாதீங்க!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கார்களுள் ஒன்று, கோடியாக் (Kodiaq) ஆகும். அதிக விலைக்கு ஏற்ப அளவில் பெரிய தோற்றம் கொண்டதாக கோடியாக் விளங்குகிறது. மேலும், ஆற்றல்மிக்க என்ஜின் மற்றும் செயல்திறன்மிக்க மெக்கானிக்கல் பாகங்களை கொண்டதாக கோடியாக் விளங்குகிறது.

இந்த ஸ்கூட்டரை இவ்வளவு பேர் வாங்குறாங்களா?

கடந்த ஜூன் மாதம் பெரும்பாலான டூவீலர் தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ச்சியை கண்ட போதிலும் யமஹா நிறுவனத்தால் பெரிய அளவில் வளர்ச்சியை காண முடியவில்லை. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 24 சதவீத வீற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட வாகனம் தான் விற்பனையை தொடர்ந்து அதிகமாகவே வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இந்த காரை விற்க இந்தியாவிலேயே ஒரேயொரு ஷோரூம் தான் இருக்கு!

மெக்லாரன் (McLaren) கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நிச்சயமாக நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். ஆனால், அதனை நிஜமாக்குபவர்கள் யாரென்று பார்த்தால், பெரும் பணக்காரர்களாகவே இருக்கின்றனர். அந்த வகையில், தற்போது ஒரு இந்திய தொழிலதிபர் தனது பிறந்த நாளை முன்னிட்டு விலையுயர்ந்த மெக்லாரான் 750எஸ் (750S) காரை வாங்கி உள்ளார்.

அதிக ஸ்டோரேஜ் கொண்ட இவி ஸ்கூட்டர்கள் இதான்!

இந்தியாவில் ஸ்கூட்டர் வாங்கும் பலர் அதன் பிராக்டிக்கல் அம்சங்களுக்காகவே அதிகம் அதை தேர்வு செய்கிறார்கள். அதிகமான பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும் என்பதே ஸ்கூட்டர்களின் முக்கியமான அம்சமாக இருக்கிறது.இந்நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் சமீப காலமாக பிரபலமாகி வரும் நிலையில் அதிக ஸ்டேரேஜ் வசதி கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

முன்னாள் முதலமைச்சர் 13 வருட பழைய காரை பயன்படுத்துகிறாரா?

சாதாரண குடிமகன் மாநிலத்தின் மூத்த அரசியல்வாதி உடன் நேரடியாக பேசுவது எல்லாம் மிகவும் அரிதாக நடக்கக்கூடிய ஒன்றாகும். மக்களுள் ஒருவருடன் பேசுவதற்காக அத்தகைய அரசியல் பிரபலங்கள் தங்களது வாகனத்தை நிறுத்துவதே பெரிய விஷயம். அப்படியிருக்க, இங்கு ஒருவர், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உடன் நேரில் ஜாலியாக கைக்குலுக்கி பேசியது மட்டுமின்றி, தற்சமயம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காரை விற்கவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இதை பண்ணா கார்ல 5 கி.மீ மைலேஜ் அதிகமாகும்!

இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலர் தங்கள் பெட்ரோல் இன்ஜின் வாகனங்களை அதிக மைலேஜ் தரும் வாகனங்களை மாற்ற விரும்புகின்றனர். இதற்கு கொஞ்சம் பணம் செலவானாலும் பராவாயில்லை பெட்ரோல் செலவை குறைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பது தான் பெட்ரோல் காரை மைல்டு ஹைபிரிட் காராக மாற்றுவது.
Advertisement

கைனெட்டிக் டி.எக்ஸ் vs பஜாஜ் சேத்தக்: எதை வாங்குவது?

கைனெட்டிக் என்ஜீனியரிங் (Kinetic Engineering) நிறுவனத்தில் இருந்து பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மீண்டும் டி.எக்ஸ் (DX) ஸ்கூட்டர் எலக்ட்ரிக் வெர்சனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1980- 90 காலக்கட்டத்தில் விற்பனையில் இருந்த டி.எக்ஸ் ஸ்கூட்டரை கைனெட்டிக் என்ஜீனியரிங் நிறுவனம் நேரடியாக உற்பத்தி செய்து விற்பனை செய்துவந்தது. ஆனால், புதிய டி.எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை (Electric Scooter) கைனெட்டிக் வாட்ஸ் & வோல்ட்ஸ் (Kinetic Watts & Volts) என்கிற துணை நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளது.

அரபு ஷேக்குகள் போல் கோடிகளில் புரளபோகும் தூத்துக்குடி மக்கள்

வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த பிரபலமான எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). இதன் தொழிற்சாலை தமிழ்நாட்டின் (Tamil Nadu) தென் பகுதியான தூத்துக்குடியில் (Thoothukudi) கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் கூடிய விரைவில் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி தொடங்கப்படவுள்ளது.

பெங்களூருவில் முதல் உருஸ் காரை டெலிவிரி பெற்ற கஸ்டமர்!!

லம்போர்கினி (Lamborghini) கார்களுக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் லம்போர்கினி கார்களுக்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் உள்ளது. 1960ஆம் காலக்கட்டத்தில் இருந்தே செயல்பட துவங்கிவிட்டாலும், லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் நேரடியாக கால் பதித்தது 2008ஆம் ஆண்டில் ஆகும். அதாவது, 2008ஆம் ஆண்டில் இந்தியாவில் அதன் முதல் டீலர்ஷிப் ஷோரூமை (Dealership Showroom) டெல்லியில் லம்போர்கினி திறந்தது.

இந்த காரின் விலையை திடீரென உயர்த்திய எம்ஜி!

எம்ஜி நிறுவனம் தனது விண்ட்ஸர் இவி காரின் விலையை கணிசமாக அதிகரித்தள்ளது. இந்த விலை உயர்வை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் இந்த காரை தற்போது நீங்கள் வாங்க வேண்டும் என நினைத்தால் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். இப்படியாக எம்ஜி விண்ட்ஸர் காரின் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

1980களில் பஜாஜ் ஸ்கூட்டர்களுக்கு தண்ணி காட்டிய ஸ்கூட்டர்!!

கைனெட்டிக் (Kinetic), இந்த பெயரை 1980 சமயத்தில் இருந்தே கேள்விப்படுவது போன்று சிலருக்கு தோன்றலாம். இப்போதும் வேறொரு பெயரில் மார்க்கெட்டில் செயல்பட்டாலும் கைனெட்டிக் பத்தோடு பதினென்றாகவே தற்சமயம் உள்ளது. ஆனால், 1980களில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்துக்கே ஸ்கூட்டர் (Scooter) விற்பனையில் ஓர் உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமாக கைனெட்டிக் டஃப் கொடுத்துக் கொண்டிருந்தது.