மகனுக்காக எம்எல்ஏ வாங்கிய விலையுயர்ந்த மெர்சிடிஸ் கார்!!
ஆட்டோமொபைல்
- 1 year, 5 month, 17 days ago
மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனம் உருவாக்கும் கார்களிலேயே விலைமிக்கது மெர்சிடிஸ்-மேபக் (Maybach) கார்கள் ஆகும். மெர்சிடிஸ்-மேபக் கார்களில் இந்தியாவில் மிகவும் பிரபலமானது மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 (GLS600) கார் ஆகும். சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மேபக் காரை சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக வாங்கி வருகின்றனர். குறிப்பாக, பாலிவுட் சினிமா வட்டாரத்தில் இந்த காரை நிறைய பேர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2023, 2024ஆம் ஆண்டுகளில் மாதத்திற்கு குறைந்தப்பட்சம் ஒருவராவது இந்த காரை வரிசையாக வாங்கி போட்டனர்.