டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு 3 மடங்கு அதிகரித்த புக்கிங்!!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவு சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் அறிமுகமாகும் 4 புதிய கார்கள்!!

இந்திய கார் சந்தையைப் பொறுத்தவரை செப்டம்பர் மாதம் எப்போதுமே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பண்டிகைக் கால விற்பனை தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய கார்களுடன் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான திட்டங்களுடன் வரிந்து கட்டி நிற்கின்றன. இந்த நிலையில், வரும் செப்டம்பரிலும் வெவ்வேறு விலைப் பிரிவுகளில் பல புதிய கார்கள் களமிறங்குகின்றன.

புதிய வண்ணத் தேர்வில் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்!!

இந்தியாவில் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள்களுக்கு தனி வரவேற்பு இருந்து வரும் நிலையில், கவாஸாகி நிறுவனம் தனது 2027ம் ஆண்டு பதிப்பாக வெர்சிஸ் 650 பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ.8.63 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் ஆண்டுக்கான அப்டேட்டில் பெரிய அளவிலான மாற்றங்கள் இடம்பெறவில்லை என்றாலும், புதிய வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் வரும் தூய்மைப் பணியாளர்!!

பொதுவாகச் சாலைகளைப் பெருக்கும் தூய்மைப் பணியாளர்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்பவர்களாகவும், சைக்கிள் அல்லது நடந்து பணிக்கு வருபவர்களாகவுமே நாம் பார்த்திருப்போம். ஆனால், கர்நாடக மாநிலத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் ரூ.50 லட்சம் மதிப்பிலான சொகுசு காரில் தினமும் பணிக்கு வரும் சம்பவம் தற்போது இந்தியா முழுதும் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Advertisement

ரூ.99,999ல் ஏத்தர் கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஸ்போர்ட்டியான பிரிமீயம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் பிரபலமடைந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம், தற்போது அதிக வாடிக்கையாளர்களை சென்றடையும் நோக்கில் புதிய கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூரில் நடந்த அந்நிறுவனத்தின் ஏத்தர் கம்யூனிட்டி டே 2026 என்ற வருடாந்திர நிகழ்ச்சியில் அறிமுகமான இந்த புதிய மாடலின் ஆரம்ப விலை ரூ.99,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.90 கோடியில் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் டுவென்டி எடிஷன்

ஆடம்பர எஸ்யூவி ரகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை வைத்துள்ள லேண்ட் ரோவர் நிறுவனம், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடலின் 20வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் டுவென்டி எடிஷன் என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த லிமிடெட் எடிஷன் எஸ்யூவிக்கு ரூ.1.90 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.12.65 லட்சத்தில் மஹிந்திரா XEV 9S எலெக்ட்ரிக் கார்!!

எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் சந்தைப் போட்டி கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப வாடிக்கையாளர்களை கவரும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களான XEV 9S மற்றும் XEV 9e ஆகிய கார்களுக்கு பேட்டரிக்கு தனி நிதி திட்டத்தை (BaaS) அறிவித்துள்ளது. ஏற்கனவே BE 6 Sporteq மாடலில் வழங்கப்பட்டு வந்த இந்த நிதித் திட்டம், இப்போது நிறுவனத்தின் அனைத்து எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கும் கிடைக்கிறது.

ஆர்எக்ஸ்100 பிராண்டில் புதிய பைக்... யமஹா திட்டம்?

இந்திய இருசக்கர வாகன வரலாற்றில் சில பைக்குளின் பெயர்கள் காலத்தைக் கடந்து நிற்கும். அந்தப் பட்டியலில் யமாஹா ஆர்எக்ஸ்100வுக்கு தனி இடம் உண்டு. 1980 மற்றும் 90களில் இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஆர்எக்ஸ்100, உற்பத்தி நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அதன் மீதான ஆர்வம் மட்டும் இன்னும் குறையவில்லை.
Advertisement

301 கிமீ ரேஞ்ச் கொண்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்தியாவின் முன்னனி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக், சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய ஓலா எஸ்1இசட் (Ola S1Z) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.79,999 என்ற மிகக் குறைந்த அறிமுக சலுகை விலையில் களமிறக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் செல் (Bharat Cell) பேட்டரி தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கார் முன்பதிவு முதல் டெலிவரி வரை தேவையான ஆவணங்கள் இதோ!

வரும் பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்கும் கனவை நனவாக்கும் முனைப்பில் பலர் திட்டம் போட்டு வைத்திருப்பீர்கள். பிடித்த காரைத் தேர்வு செய்து ஷோரூமுக்குச் சென்ற பிறகு, தேவையான ஆவணங்கள் தயாராக இல்லை என்றால் முன்பதிவு முதல் டெலிவிரி மற்றும் வாகனப் பதிவு பணிகள் வரை தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நாளை அறிமுகமாகிறது புதிய ஏத்தர் கோனார்க் EV ஸ்கூட்டர்!

இதுவரை ஸ்போர்ட்டியான பிரிமீயம் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கவனம் செலுத்தி வந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் முதல்முறையாக விலை குறைவான சந்தையில் களமிறங்குவதற்கு ஆயத்தமாகிவிட்டது. கோனார்க் என்ற பெயரில் குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட கோனார்க் என்ற புத்தம் புதிய ஸ்கூட்டரை நாளை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

ரூ.2.01 லட்சத்தில் ஸ்பெஷலான ஜாவா 42 பைக் அறிமுகம்!

ரெட்ரோ தோற்றத்துடன் நவீன அம்சங்களை வழங்கும் ஜாவா 42 எஃப்.ஜே பைக்கிற்கு புதிய அவதாரம் கிடைத்துள்ளது. க்ளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் 2026ம் ஆண்டுக்கான ஸ்பெஷல் எடிசன் ஜாவா 42 எஃப்ஜே ஆல் ஸ்டார்ஸ் என்ற பெயரில் புதிய எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலில் ஆறு விதமான புதிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலானது ரூ.2,01,942 என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கும்.
Advertisement

ரூ.90,000ல் ஸ்பெஷலான டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்தியாவின் பிரபலமான குடும்ப ஸ்கூட்டர்களில் ஒன்றான டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூபிடர் ஸ்பெக்ட்ரல் என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸ்பெஷல் மாடலுக்கு ரூ.89,825 என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்தான் ஜூபிடர் 110 ஸ்கூட்டர் வரிசையில் டாப்-எண்ட் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவுக்குப் புதிய பெயர்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி கார தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், தனது பயணிகள் வாகனப் பிரிவுக்கு (Passenger Vehicles) 'Tata.cars' என்ற புதிய பிராண்ட் அடையாளத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம், ஷோரூம்கள் முதல் டிஜிட்டல் தளங்கள் வரை அனைத்திலும் இனி பிரதிபலிக்கும்.

ரூ.5 லட்சத்தில் மாருதியின் புது மைக்ரோ எஸ்யூவி!!

அனைத்து ரக விலையிலும், செக்மென்ட்டிலும் எஸ்யூவி ரக கார் இருந்தால்தான் காலந்தள்ள முடியும் என்ற நிலை இந்திய கார் சந்தையில் உள்ளது. வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அனைத்து நிறுவனங்களும் பல்வேறு ரகங்களில் எஸ்யூவி ரக கார்களை களமிறக்கி வருகின்றன. ஆனால், ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் முன்கூட்டியே கணித்து எஸ்யூவிகளை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சாமர்த்தியமாக மைக்ரோ எஸ்யூவி ரகத்தில் பன்ச் என்ற மாடலை களமிறக்கியது.

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜயின் சொகுசு கார்கள்!!

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஜோசப் விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, கார் மற்றும் ஆட்டோமொபைல் ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது. திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்தபோதே விலை உயர்ந்த கார்களைப் பயன்படுத்தி வந்த விஜய், தற்போது முதலமைச்சராகவும் பிரீமியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாகனங்களுடன் பயணம் செய்து வருகிறார்.
Advertisement

செப்டம்பர் 2ல் வெளிவரும் புதிய தலைமுறை மிட்சுபிஷி பஜேரோ...!!

ஆஃப்-ரோடு எஸ்யூவி உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய மிட்சுபிஷி பஜேரோ, புதிய தலைமுறை மாடலாக வரும் செப்டம்பர் 2-ம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த தேதியை மிட்சுபிஷி தனது அதிகாரப்பூர்வ பஜேரோ டீசர் தளத்தில் தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ரூ.2.30 லட்சத்தில் புத்தம் புதிய R2 ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்

இளைஞர்களிடம் ஆவலை ஏற்படுத்தியிருந்த புத்தம் புதிய யமஹா YZF-R2 ஸ்போர்ட்ஸ் பைக் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாக R15 பைக்கிற்கு மேலாக அடுத்த கட்டத்தில் ஒரு பைக்கை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு இந்த புதிய மாடல் முக்கியமான தேர்வாக இருக்கும். இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 26 புதிய கார்களை களமிறக்கும் ஹூண்டாய்!!

இந்திய கார் மார்க்கெட்டில் நீண்ட காலமாக இரண்டாவது இடத்தில் இருந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கு தற்போது டாடா, மஹிந்திரா ஆகிய இரண்டு உள்நாட்டு நிறுவனங்களும் கடுமையான சந்தைப் போட்டியை கொடுத்து வருகின்றன. கடந்த மாத விற்பனையில் நான்காவது இடத்தில் ஹூண்டாய் பின்தங்கியது. இந்த நிலையல், இந்திய சந்தையில் மீண்டும் இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை ஹூண்டாய் மேற்கொண்டுள்ளது. இதற்ககாக 26 புதிய கார்களை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துள்ளது. இதில், 7 புதிய கார்கள் அடுத்த 8 மாதங்களில் வர இருக்கின்றன.

புதிய எம்ஜி தோமஹாக் PHEV கார் 40 கிமீ மைலேஜ் உண்மையா?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எம்ஜி தோமஹாக் ஹைப்ரிட் கார் நேற்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கார் குறிப்பிட்ட கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 40கிமீ மைலேஜ் என்பதுடன், எரிபொருள் முழுமையாக நிரப்பப்படும்பட்சத்தில் 1,100 கிமீ வரை ரேஞ்ச் தரும் என்று எம்ஜி நிறுவனம் தெரிவித்தது. ஒரு 7 சீட்டர் காருக்கு இந்த அளவு மைலேஜ் என்பது எல்லோர் மனதிலும் கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில், இந்த காரின் பிளக் இன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் பிற ஹைப்ரிட்டுகளைவிட சற்று வித்தியாசமானதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே எம்ஜி நிறுவனம் இந்த மைலேஜ் விபரங்களை சோதனை தரவுகளின்படி கூறுகிறது.
Advertisement

பொள்ளாச்சிக்கு ரயிலில் வந்த 120 மாருதி கார்கள்!!

பொள்ளாச்சி நகரம் தற்போது மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் டெலிவிரிப் பணிகளில் புதிய மையமாக மாற இருக்கிறது. இதுவரை டிரக்குகள் மூலமாக புதிய கார்களை டீலர்களுக்கு அனுப்பும் போக்குவரத்து முறையை படிப்படியாக குறைத்து தற்போது ரயில்கள் மூலமாக அனுப்பும் திட்டத்திற்கு கார் நிறுவனங்கள் மாறி வருகின்றன. அந்த வகையில், மாருதி கார் நிறுவனமும் தனது கார்களை சரக்கு ரயில் மூலமாக அனுப்புவதற்கான திட்டத்தை விரிவுப்படுத்தி வருகிறது.

E20 பெட்ரோலால் நாலா பக்கமும் இடி? அடுத்தடுத்த ஷாக்!!

இந்தியாவில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படும் E20 நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதன் தாக்கம் வாகனங்களின் மைலேஜ் மற்றும் செயல்திறனுடன் மட்டும் முடிந்துவிடுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் தேவை அதிகரிப்பது முதல் பழைய பெட்ரோல் வாகனங்களின் பராமரிப்பு செலவு வரை, நுகர்வோருக்கு பல்வேறு வழிகளில் கூடுதல் செலவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ரூ.25.69 லட்சத்தில் எம்ஜி ஹெக்டர் தோமஹாக் ஹைப்ரிட் கார்!

எம்ஜி மோட்டார் நிறுவனம் இன்று தோமஹாக் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வந்த கையோடு, அதன் ஹைப்ரிட் மாடலையும் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த கார் பெட்ரோல்- எலெக்ட்ரிக் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் மோடில் தனியாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய காரு ரூ.25.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் 'மாஸ் மார்க்கெட்' பிரிவில் அறிமுகமாகும் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் வகை எஸ்யூவி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

அறிமுகமானது புதிய எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் EV கார்!

பண்டிகை காலத்தில் புதிய எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்திய எம்ஜி ஹெக்டர் தோமஹாக் எலெக்ட்ரிக் கார் சற்றுமுன் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அண்மையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த ADAPT என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்ட முதல் கார் மாடலாக இந்தியாவில் களமிறக்கப்பட்டு இருக்கிறது.
Advertisement

கியா சைரோஸ் எலெக்ட்ரிக் காருக்கு நீளும் வெயிட்டிங் பீரியட்!

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அதில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கியா சைரோஸ் எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் சைரோஸ் கார்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்த நிலையில், அதன் எலெக்ட்ரிக் மாடலுக்கு முன்பைவிட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது. சைரோஸ் எலெக்ட்ரிக் காருக்கு தற்போது வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.