டாடா கார் பிளாட்ஃபார்மில் ஜீப் எஸ்யூவிகள்?

டாடா கார்கள் உருவாக்கப்பட்ட கட்டமைப்பை பயன்படுத்தி புதிய கார்களை தயாரிக்க ஸ்டெலாண்டிஸ் குழுமம் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலமாக, இந்திய கார் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லமை இப்போது உலக அளவில் செல்ல இருப்பதுடன், உலகின் பெரிய கார் தயாரிப்பு குழுமங்களில் ஒன்றான ஸ்டெலாண்டிஸ் டாடா கார் கட்டமைப்பை பயன்படுத்த இருப்பது ஆட்டோமொபைல் உலகினரையும், கார் பிரியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புதிய ஹூண்டாய் பயோன் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு!

புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்களைக் கவரும் வகையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய பயோன் (BAYON) எஸ்யூவியின் இந்தியாவுக்கான மாடலை வெளியிட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம், மேம்பட்ட இணைப்பு வசதிகள், டிஜிட்டல் திரைகள் எனப் பல சிறப்பம்சங்களுடன் வரும் இந்தக் கார் அக்டோபர் 26ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது. இந்த காரின் டிசைன் எல்லோரையும் கவரும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கேரள மினி கூப்பர் விபத்து: பெற்றோர்களுக்கு சொல்லும் பாடம்

பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த கார் வாங்கிக் கொடுப்பது பல பெற்றோர்களின் ஆசையாக மாறி இருக்கிறது. இது அந்தஸ்தையும், லைஃப்ஸ்டைலையும் அனைவருக்கும் தெரியப்படுத்தும் ஒரு ஆயுதமாகவும் பெற்றோர்களால் பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் இருந்தால் பிள்ளைகளுக்கு பரிசாக கார், பைக்குகளை வாங்கிக்கொடுப்பது தவறில்லை. ஆனால், அந்தக் காரை எப்படிப் பயன்படுத்த வேண்டும், சாலை விதிகளை ஏன் மதிக்க வேண்டும், மற்றவர்களின் உயிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது அவசியம் என்பதை கேரளாவில் நடந்த கோர விபத்து பெற்றோர்களுக்கு உணர்த்துகிறது.

பண்டிகை கால ஸ்பெஷல்! BYD சீ லயன் 7 புதிய எடிஷன் அறிமுகம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, BYD நிறுவனம் தனது சீ லயன் 7 (SEALION 7) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய லிமிடெட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. SEALION 7 Festive Edition எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய மாடல், ரூ.50.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.
Advertisement

ரூ.1.26 கோடியில் வால்வோ EX90 எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

இந்தியாவில் சொகுசு கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மின்சார வாகனங்களுக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து நிறுவனங்களும் இந்த சந்தையில் களமிறங்கி வருகின்றன. அந்த வகையில், வால்வோ நிறுவனமும் தனது புதிய மின்சார எஸ்யூவியான EX90 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1.26 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ள இந்தக் கார், நீண்ட தூரம் பயணிக்கும் திறன், சக்திவாய்ந்த மின்மோட்டார்கள் மற்றும் நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுடன் வந்துள்ளது.

3 டோர் தார் OG போல அப்டேட்டுகளை பெறும் 5 டோர் தார் ராக்ஸ்

மஹிந்திரா தார் காரை விரும்புபவர்களுக்கு அதன் தோற்றம், சாலைகளில் கிடைக்கும் கம்பீரம், கரடுமுரடான பாதைகளிலும் பயணிக்கும் திறன் ஆகியவை முக்கியமானதாக இருக்கின்றன. ஆனால், தினசரி நகரப் பயணங்களிலும் குடும்பத்துடன் நீண்ட தூரம் செல்லும்போதும் சொகுசான பயண அனுபவத்தை பெற வேண்டும் என்பதும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு தார் ராக்ஸ் எஸ்யூவியில் புதிய மாற்றங்களுடன் வர இருக்கிறது.

LED விளக்குகளுடன் வந்தது 2026 டிவிஎஸ் ரேடியான்!

இந்தியாவில் தினசரி அலுவலகப் பயணம் மற்றும் குடும்பத் தேவைகளுக்காக பைக் வாங்குபவர்கள் மத்தியில் 100 சிசி முதல் 110 சிசி வரையிலான கம்யூட்டர் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறைவான விலை, எளிமையான பராமரிப்பு, நகரப் போக்குவரத்தில் எளிதாக ஓட்டும் வசதி ஆகியவை இந்தப் பிரிவின் முக்கிய அம்சங்கள். இந்நிலையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ரேடியான் பைக்கை 2026ஆம் ஆண்டுக்கான அப்டேட்டுகளுடன் புதிய தோற்றத்துடன் புதுப்பித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இனி 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் FASTag

சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு பெறும் மாற்றுத்திறனாளிகள், அதற்கான ஆவணங்கள் மற்றும் ஃபாஸ்டேக் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. இந்நிலையில், தகுதியுள்ள பயனாளிகள் அடிக்கடி ஃபாஸ்டேக்கை புதுப்பித்தல் செய்ய வேண்டிய சிரமத்தைக் குறைக்கும் வகையில், ஃபாஸ்டேக்கின் செல்லுபடிக் காலத்தில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.
Advertisement

ரூ.6,000 மாதத் தவணையில் வாங்கக்கூடிய புதிய கார்கள்!!

பண்டிகை காலம் வந்துவிட்டாலே பலருக்கு புதிய கார் கனவு மனதில் அல்லாட ஆரம்பித்துவிடும். ஆனால், பட்ஜெட் குறித்த கவலை உள்ளிட்ட பிரச்னைகளால் கார் கனவு திட்டம் தொடர்ந்து தள்ளிப்போடும் நிலை உள்ளது. இந்த நிலையில், புதிய கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதிக முன்பணம் செலுத்துவதும், மாதந்தோறும் பெரிய தொகையைத் தவணையாகக் கட்டுவதும் சவாலாக இருக்கிறது. குறிப்பாக, முதல் முறையாக கார் வாங்குபவர்கள் குறைந்த முன்பணத்தில், தங்களது மாத வருமானத்திற்குள் கட்டுப்படியாகும் தவணையில் கார் வாங்கவே விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்ற பட்ஜெட் விலையில் கிடைக்கும் சில புதிய கார்களைப் பற்றிப் பார்க்கலாம்.

டெல்லி காரை தமிழகத்தில் வாங்குவது லாபமா? இத படிங்க முதல்ல!

தமிழகத்தில் பயன்படுத்திய கார் வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை தற்போது டெல்லி பதிவு கொண்ட கார்கள் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா போன்ற டீசல் கார்கள் குறைந்த விலையில் கிடைப்பதாக முகவர்கள் விளம்பரப்படுத்துகின்றனர். டெல்லியில் பழைய வாகனங்களுக்கான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் இதற்குப் பின்னணியில் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

மின்சார கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய ஐடி டிகுவான் (Volkswagen ID. Tiguan) எலெக்ட்ரிக் எஸ்யூவியை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பிரபலமான டிகுவான் பெயரில் உருவாகியுள்ள இந்த மின்சார கார், அதிகபட்சமாக சுமார் 600 கி.மீ ரேஞ்ச், சக்திவாய்ந்த மின்மோட்டார் மற்றும் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் கவனம் பெற்றுள்ளது.

'மினி' எலிவேட் எஸ்யூவியை அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா?

இந்திய கார் மார்க்கெட்டில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு எகிடுதகிடாக இருந்து வருகிறது. குறிப்பாக, 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ள காம்பேக்ட் ரக எஸ்யூவிகளுக்கு பெரிய அளவில் மார்க்கெட் இருக்கிறது. இதனால், ஏறக்குறைய இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இந்த சந்தையில் தங்களது தயாரிப்புகளை நிலைநிறுத்தி நல்ல காசு பார்த்து வருகின்றன.
Advertisement

மஹிந்திராவின் முதல் சிஎன்ஜி கார் ரெடி! அக்.15ல் வருகிறது 3XO

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வால் தற்போது சிஎன்ஜி, எலெக்ட்ரிக் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதிக மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்புச் செலவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சிஎன்ஜி கார்களைத் தேர்வு செய்கின்றனர். இதனை மனதில் வைத்து, இதுவரை பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்தி வந்த மஹிந்திரா நிறுவனம், தற்போது சிஎன்ஜி பிரிவிலும் களமிறங்கத் தயாராகி வருகிறது.

ரூ.6 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும் பட்ஜெட் கார்கள்!

பண்டிகைக் காலத்தில் சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்பது பல இந்திய குடும்பங்களின் திட்டமாக உள்ளது. குறிப்பாக, முதல்முறையாக கார் வாங்கும் கனவுடன் இருப்பவர்களுக்கு குறைவான பட்ஜெட் விலை கார் வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும், பலர் எக்ஸ்ஷோரூம் விலையை மனதில் வைத்து ஷோரூமுக்கு சென்று விடுகின்றனர். அங்கு எக்ஸ்ஷோரூம் விலையுடன் சாலை வரி, காப்பீடு உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்து டீலர் விற்பனை பிரதிநிதி கூறும்போது குழப்பம் ஏற்படுகிறது.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் 5 முக்கிய கார்கள்

அடுத்த வாரம் இந்தியாவில் பல முக்கிய புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. சொகுசு மின்சார கார்கள் முதல் ஹைப்ரிட் எஸ்யூவி வரை பல்வேறு பிரிவுகளில் புதிய தேர்வுகள் வரவுள்ளன. குறிப்பாக வால்வோ, டொயோட்டா, ஆடி மற்றும் ரெனோ நிறுவனங்களின் முக்கிய மாடல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய கார் சந்தையில் புதிய எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த ஜேஎ

இந்திய கார் சந்தையில் புதிய எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த ஜேஎஸ்டபிள்யூ (JSW) நிறுவனம் தயாராகி வருகிறது. JSW Combat என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி ரக கார் வரும் டிசம்பர் 4ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சக்திவாய்ந்த ஹைபிரிட் தொழில்நுட்பமும், ஆஃப்ரோடு அம்சங்களுடன் கம்பீரமான தோற்றமும் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.
Advertisement

75% வரை ரீசேல் மதிப்புடன் திரும்ப எடுத்துக்கிறோம்: கியா

கார் வாங்கும்போது அதன் விலை, மைலேஜ், வசதிகள் மட்டுமின்றி, சில ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதையும் வாடிக்கையாளர்கள் கவனிக்கின்றனர்.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன் அறிமுகம்

டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் லீடர் எடிஷன் (Toyota Fortuner Leader Edition) என்ற புதிய பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கருப்பு நிற அலங்கார அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட உட்புறத் தோற்றம் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த சிறப்புப் பதிப்பு விற்பனைக்கு வந்துள்ளது.

2030-க்குள் பிஎஸ்4 வாகனங்களுக்குத் தடை?

டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் வடமத்திய பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க, பழைய வாகனங்களைப் படிப்படியாகப் பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கான புதிய பரிந்துரைகள் வெளியாகியுள்ளன. இதன்படி, பிஎஸ்4 மாசு உமிழ்வு தரநிலையைக் கொண்ட வாகனங்களை 2030-க்குள் படிப்படியாக நீக்க வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், கார், பைக், ஸ்கூட்டர் உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

29 கிமீ மைலேஜ் தருமாம் டஸ்ட்டர் ஹைப்ரிட்! வேறென்னங்க வேணும்?

இந்தியாவில் மீண்டும் வரவேற்பைப் பெற்று வரும் ரெனோ டஸ்ட்டர் (Renault Duster) எஸ்யூவி, தற்போது ஹைப்ரிட் தொழில்நுட்பம் மூலம் கவனம் ஈர்த்துள்ளது. இதன் புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 29 கிமீ மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் எரிபொருள் செலவைக் குறைக்க விரும்பும் எஸ்யூவி வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement

EV ஸ்கூட்டர்களுக்காக புதிய டீலர்களை நியமித்த வின்ஃபாஸ்ட்!

வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம், இந்திய மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் நுழைவதற்கான முக்கிய நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50-க்கும் மேற்பட்ட டீலர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. மேலும், விற்பனை மட்டுமின்றி, விற்பனைக்கு பிந்தைய சேவையிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

புதிய வண்ணத்தில் சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ்! என்ன புதுசு?

சாகசப் பயணம் மற்றும் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற பைக்குகளை விரும்புபவர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் (V-Strom SX) தற்போது புதிய வண்ணத் தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தோற்றத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் கிரே என்ற இரட்டை வண்ணக் கலவை வழங்கப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சத்திற்குள் 5 ஸ்டார் பாதுகாப்பு எஸ்யூவி கார்கள்!

புதிய கார் வாங்கும்போது விலை, மைலேஜ், வசதிகள் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக குடும்பத்துடன் பயன்படுத்தும் SUV கார்களில் விபத்து நேரத்தில் பயணிகளை எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பது முக்கியமான முடிவெடுக்கும் காரணியாக மாறியுள்ளது.

அப்படியே 'டபுள்' ஆன எலெக்ட்ரிக் கார் விற்பனை!

இந்தியாவில் மின்சார கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மின்சார கார் விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 94.56 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பரில் மட்டும் 36,108 மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் 18,559 EV கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இதனை ஒப்பிடுகையில், ஒரே ஆண்டில் மின்சார கார் சந்தை கிட்டத்தட்ட இரு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
Advertisement

புதிய எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்டார்ம், ஸ்னோஸ்டார்ம் மாடல்கள்!

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவியின் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் பிளாக்ஸ்டார்ம் மற்றும் ஸ்னோஸ்டார்ம் என இரண்டு மாடல்கள் வந்துள்ளன. இரண்டு மாடல்களுக்கும் ரூ.19,99,800 எக்ஸ்ஷோரூம் விலையாக ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை 5 இருக்கைகள் கொண்ட பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலாக கிடைக்கின்றன.