ரூ.8 லட்சத்தில் வரும் ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி அறிமுகம் உறுதி!!

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படும் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் இந்திய அறிமுகத்தை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு மூலமாக அதிகாரப்பூர்வமாக இன்று உறுதி செய்துள்ளது. இந்த கார் ஸ்கோடா கைலாக் அடிப்படையிலான காம்பேக்ட் எஸ்யூவியாக இருக்கும். வரும் 2027ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

E20 பெட்ரோல்: அதிக மைலேஜ் தரும் பெஸ்ட் கார்கள்!

Worried about E20 petrol mileage drops? Discover the best fuel-efficient cars under 10 Lakhs in India for 2026. E20 பெட்ரோலால் மைலேஜ் குறையுமா? 10 லட்சத்திற்குள் சிறந்த மைலேஜ் தரும் கார்கள் மற்றும் பராமரிப்பு டிப்ஸ் இதோ.

மஹிந்திரா XEV 9S காரின் 6 சீட்டர் மாடல் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்வி 9எஸ் எலெக்ட்ரிக் காரில் 6 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடுவரிசையில் 3 பேர் அமர்வதற்கான பென்ச் இருக்கை அமைப்புக்கு பதிலாக கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், 6 பேர் வசதியாக அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பை இந்த புதிய மாடல் வழங்கும்.

BYD சீ லயன் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!!

இந்தியாவின் பிரீமியம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம், தனது சீ லயன் 7 (Sea Lion 7) எலெக்ட்ரிக் எஸ்யூவியில் டயனமிக் என்ற பெயரில் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.41.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் என்ற அறிமுக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரிமீயம் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் என்ற இரண்டு வேரியண்ட்டுகள் விற்பனையில் உள்ள நிலையில், டயனமிக் வேரியண்ட் இந்த காரின் விலை குறைவான தேர்வாக வந்துள்ளது.
Advertisement

கியா சொரென்டோ எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு!

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள கியா சொரென்டோ எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் உள்ள கியா ஆலையில் இந்த காரின் உற்பத்தியும் துவங்கி இருக்கிறது.

ஸ்கோடா கைலாக் காரில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட் அறிமுகம்!

ஸ்கோடா கைலாக் எஸ்யூவியில் கூடுதல் கவர்ச்சிகர அம்சங்களுடன் கூடிய புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கைலாக் ஸ்போர்ட்லைன் என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.11.32 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகளை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வேரியண்ட், கைலாக் எஸ்யூவியின் ஏழாவது வேரியண்ட்டாக இணைந்துள்ளது. கைலாக் ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டின் முக்கிய சிறப்புகளாக அதன் வெளிப்புறத்தில் பல கவர்ச்சிகரமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 2ல் புதிய சிம்பிள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் குடும்ப பயன்பாட்டுக்கான மாடல்களுக்கு தற்போது அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனைல், இந்த பிரிவை குறிவைத்து பல புதிய மாடல்கள் வரத் துவங்கி உள்ளன. வரும் 29ந் தேதி ஏத்தர் நிறுவனம் புத்தம் புதிய ஸ்கூட்டரை இந்த செக்மென்ட்டில் களமிறக்க உள்ள நிலையில், பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனெர்ஜி நிறுவனமும் இந்த ரகத்தில் புத்தம் புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

2 புதிய செரி எஸ்யூவிகளுக்கு இந்தியாவில் காப்புரிமை!

சீனாவைச் சேர்ந்த செரி ஆட்டோமொபைல் நிறுவனம் இந்தியாவில் கால் பதிப்பதற்கான திட்டங்களில் தீவிரமாக இறங்கி உள்ளது. ஏற்கனவே ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் தனது புதிய கார் மாடல்களுடன் வர்த்தகத்தை துவங்க தயாராகி வருகிறது. மேலும், தொடர்ந்து தனது கார் மாடல்களுக்கு இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்யும் முயற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.
Advertisement

VinFast VF 5 இந்தியாவில் சோதனை... Tata Punch EV-க்கு செக்!

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த மாதம் அந்நிறுவனத்தின் மாதாந்திர விற்பனை புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில், விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக பல புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், டாடா பன்ச் எலெக்ட்ரிக் காருக்கு நேர் போட்டியான விலையில் புதிய மாடலை வின்ஃபாஸ்ட் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் புக்கிங்!

பெர்ஃபார்மென்ஸ் வகையறாவில் உள்ள ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருவது அறிந்ததே. இந்த கார் எப்போதுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படுவதும், அதனை அடித்து பிடித்து வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதும் நடைமுறையாகவே இருந்து வருகிறது.

பழைய வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோல்? மத்திய அரசு ஆலோசனை

நாடுமுழுவதும் E20 பெட்ரோல் பயன்பாடு மீதான தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், பழைய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோல் வழங்குவது குறித்து மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ஆரம்பகட்ட ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி தமிழ்நாட்டு நெடுஞ்சாலைகளில் இந்த வேகத்திற்கு மேல் கூடாது

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வேக வரம்பை மீறி செல்லும் அதிவேக வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்கும் நடைமுறைகள் விரைவில் கொண்டு வர உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
Advertisement

இந்திய EV மார்க்கெட்டில் வின்ஃபாஸ்ட் அசத்தல்!!

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் புதிதாக களமிறங்கிய வின்ஃபாஸ்ட், மிக குறுகிய காலத்திலேயே கவனித்தக்க அளவில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூலை மாத விற்பனையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் 1,478 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் பயணிகள் வாகன சந்தையில் மிக முக்கிய பங்களிப்புடன் முன்னேறி வருகிறது.

கார் வாங்கும் முன் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்கும் வழக்கம் இந்தியர்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. பண்டிகைகளின் மகிழ்ச்சியை இரடிப்பாக்கும் விதத்தில் இந்த புதிய கார் வாங்கும் நடைமுறை பெரும்பாலான குடும்பங்களில் வழக்கமாகிவிட்டது. தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு கார் நிறுவனங்களும், டீலர்களும் பல்வேறு தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ், இலவச ஆக்சஸரீஸ் உள்ளிட்ட சலுகைகளை அறிவிக்கின்றனர். இதனால் புதிய கார் வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்று பலரும் நினைப்பது இயல்பான விஷயமாகவே உள்ளது..

டாடா பன்ச் இவிக்கு போட்டியாக வரும் புதிய கியா எஸ்யூவி!!

டாடா பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக சிறிய எலெக்ட்ரிக் எஸ்யூவியை களமிறக்க கியா நிறுவனம் தயாராகி வருகிறது. இந்தியாவுக்காக கியா திட்டமிட்டுள்ள பல புதிய மாடல்கள் வரிசையில் இந்த எஸ்யூவியும் இடம்பெற்றுள்ளது. அதாவது, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சைரோஸ் எலெக்ட்ரிக் காரைவிட விலை குறைவான மாடலாக வர இருக்கிறது.

அடுத்த 2 வாரங்களில் அறிமுகமாகும் 5 புதிய கார்கள்!!

பண்டிகை காலம் துவங்க இருக்கும் நிலையில், இந்திய கார் சந்தையில் அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கப்போகிறது. ஆகஸ்ட் மாதத்தின் இறுதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை பல்வேறு வகைகளில் பல புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு இந்த புதிய மாடல்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
Advertisement

டீசல் எஞ்சினுடன் இந்தியா வந்த புதிய ஸ்கோடா சூப்பர்ப்!

புதிய தலைமுறை அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஸ்கோடா சூப்பர்ப் பிரீமியம் செடான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டீசல் எஞ்சினுடன் இந்த கார் வர இருப்பது முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

அதிக சிறப்பம்சங்களுடன் ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

இந்திய மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் மதிப்புமிக்க தேர்வாக ஸ்கோடா ஸ்லாவியா கார் இருந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் தற்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான விலை விபரம் வரும் அக்டோபரில் வெளியிடப்படும் என்றும் ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்பெஷல் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் அறிமுகம்!

கூர்க்கா ராணுவ படைப்பிரிவின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் அம்சங்களுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் புதிய ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய ராணுவத்தின் கூர்க்கா படைப்பிரிவின் வீரம், ஒழுக்கம், துணிச்சல் மற்றும் பாரம்பரியத்தை போற்றும் வகையில் இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் தனித்துவமான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

EV, CNG வாகனங்களுக்கு 5 ஆண்டு கூடுதல் வயது வரம்பு?

இந்தியாவில் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு புதிய முக்கியமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. பேட்டரி, ஹைட்ரஜன் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் நேஷனல் பர்மிட் பெற்ற வர்த்தக வாகனங்களின் அனுமதிக்கப்பட்ட வயது வரம்பை கூடுதலாக 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
Advertisement

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை களமிறக்குகிறது கியா?

கியா மோட்டார் இந்தியா நிறுவனம் விரைவில் சொரென்டோ என்ற பிரிமீயம் 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், அடுத்து இரண்டு புதிய ரக எஸ்யூவி மாடல்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், ஒன்று 7 சீட்டர் எஸ்யூவியாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புது ஏத்தர் ஸ்கூட்டர வருஷத்துக்கு ஒருவாட்டி சர்வீஸ் போதுமாம்

பண்டிகை காலத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க காத்திருப்போர் மத்தியில் புதிதாக வர இருக்கும் ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டர் பெரிய அளவிலான ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏத்தர் நிறுவனத்தின் விலை குறைவான தேர்வாகவும், அதிக சிறப்பம்சங்களுடன் பாரம்பரிய ஸ்கூட்டர் டிசைன் அம்சங்களுடன் வருவதே காரணமாக இருக்கிறது.

இந்தியாவில் தனித்துவமான ஜீப் காம்பஸ் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!

ஜீப் நிறுவனத்தின் 85 ஆண்டுகால பாரம்பரியத்தையும், நிறைவு விழாவையும் முன்னிட்டு, காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பல்வேறு தனித்துவமான அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த மாடல் வெறும் 85 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

ஒரே நாளில் 150 சைரோஸ் எலெக்ட்ரிக் கார்கள் டெலிவிரி!!

அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா சைரோஸ் எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பரைசாற்றும் விதத்தில், கேரளம் மாநிலம், கொச்சியில் உள்ள கியா டீலரில் ஒரே நாளில் 150 கியா சைரோஸ் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரே நாளில் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisement

மீண்டும் E10 பெட்ரோல்?- தலைமை பொருளாதார ஆலோசகர் பரிந்துரை

நாடுமுழுவதும் E20 பெட்ரோல் பரவலாக்கப்பட்டு விட்ட நிலையில், E10 பெட்ரோலையும் ஒரு தேர்வாக வழங்க வேண்டும் என்ற முக்கிய யோசனையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் முன்வைத்துள்ளார்.