ம்ஜியின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியின் முதல் தரிசனம்!!

பண்டிகை காலத்தில் 7 சீட்டர் கார் வாங்க இருப்போரின் கவனத்தை எம்ஜி நிறுவனத்தின் புதிய ஹெக்டர் ஹாக் எஸ்யூவி ஈர்த்துள்ளது. வரும் 26ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த கார் எப்படியிருக்கும் என்று எல்லோரின் எதிர்பார்ப்பையும் கிளப்பி வருகிறது. இந்த நிலையில், முதல்முறையாக இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கேமரா கண்களில் சிக்கி பொது பார்வைக்கு வந்துள்ளது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக்: 3 மாடல்களின் விபரம்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக் மாடலை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. ஸ்கார்ப்பியோ லைஃப்ஸ்டைலர் பிக்கப் என்ற பெயரில் வந்துள்ள இந்த மாடலானது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பரிசீலனையிலும் எடுக்க வைத்துள்ளது.

டாடா பன்ச் எலெக்ட்ரிக் காருக்கு இப்படியோரு டிமான்ட்டா?

டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரின் சில வேரியண்ட்டுகளுக்கு டிமான்ட் எகிடுதகிடாக அதிகரித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட வேரியண்ட்டுகளை இப்போது புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் 8 மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிய ஆலையை அமைக்கிறது அல்ட்ராவைலட்!!

எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தித் துறையில் தமிழகம் நாட்டின் மிக முக்கிய கேந்திரமாக மாறி வருகிறது. ஓலா, ஏத்தர், டிவிஎஸ் மற்றும் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அல்ட்ராவைலட் நிறுவனமும் தனது புதிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
Advertisement

ரூ.1.23 லட்சத்தில் புதிய பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!!

நகர்ப்புறத்தில் மிக எளிதாக ஓட்டுவதற்கான அம்சங்களுடன் கூடிய புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிகாஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிகாஸ் ஊவா மேக்ஸ் ப்ளஸ் (OoWah Max Plus) என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. ரூ.1.23 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டி வரி மற்றும் சார்ஜரின் விலையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிகாஸ் தெரிவித்துள்ளது.

ம்ஜி ஹெக்டர் ஹாக் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு புக்கிங்

எம்ஜி மோட்டார் நிறுவனம் விரைவில் தனது 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹெக்டர் ஹாக்(Hector Hawk) என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவிக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக டீலர்களில் துவங்கப்பட்டுள்ளது. ரூ.21,000 முன்பணம் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் 5ல் புதிய மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!

வடிவமைப்பில் மாறுதல்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாருதி பலேனோ கார் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் வரும் செப்டம்பர் 5ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், மாருதி நிறுவனம் டீசரையும் வெளியிட்டு இருக்கிறது.

ரூ.3.58 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு கான்டினெட்டல் ஜிடி

டிசைனில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் கூடிய ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி650 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான பதிப்பாக வந்துள்ள இந்த புதிய கஃபே ரேஸர் வகை மாடல் ரூ.3.58 லட்சம் முதல் ரூ.3.88 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.
Advertisement

வெறும் ரூ.11.45 லட்சத்தில் மஹிந்திரா பிஇ6 ஸ்போர்டெக் கார்!

யாரும் எதிர்பாராத விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மஹிந்திராவின் பிஇ6 எலெக்ட்ரிக் எஸ்யூவியின் ஸ்போர்டெக் என்ற புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்டீரியரில் டிசைன் மாற்றங்கள், ஏஐ தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த காரின் பேட்டரிக்கு சந்தா திட்டமும் கொடுக்கப்படுகிறது. இதனால், ரூ.11.45 லட்சம் ஆரம்ப விலையிலேயே இந்த காரை வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

செப்டம்பர் 4ல் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 அறிமுகம்!

அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் பிரியர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஹிமாலயன் பைக்கின் புதிய 440 மாடல் வரும் செப்டம்பர் 4ந் தேதி அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பழைய ஹிமாலயன் டிசைனை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய மாடல் வர இருப்பதால் ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் மத்தியில் பேராவலை எழுப்பி உள்ளது.

அறிமுகமானது மஹிந்திரா ஸ்கார்ப்பியோ லைஃப்ஸ்டைலர் பிக்கப்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ என் பிக்கப் டிரக் இன்று பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ லைஃப்டைலர் (Scorpio Lifestyler) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிக்கப் டிரக் இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் பல்வேறு வெளிநாடுகளிலும் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. வரும் 2027ம் ஆண்டு ஏப்ரலில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஜூலை விற்பனையில் அசத்திய இந்தியாவின் டாப் 15 கார்கள்

கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் கார் விற்பனை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக, பல முன்னணி கார் மாடல்களின் விற்பனை 50 முதல் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் விரைவில் துவங்க இருக்கும் நிலையில், டீலர்களுக்கு அதிக அளவில் கார்களை தயாரிப்பாளர்கள் அனுப்பியதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில், கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 15 கார்கள் பற்றிய பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Advertisement

பெங்களூரில் வீட்டு முன்பு காரை நிறுத்துவதற்கு ரூ.25,000?

பெங்களூரில் வீட்டு முன்பு அல்லது பொதுச் சாலைகளில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கர்நாட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கிரேட்டர் பெங்களூர் ஆணைய பார்க்கிங் விதிகள் 2026 என்ற பெயரில் வரைவுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குடியிருப்புப் பகுதிகளிலும் சாலையோரமும் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ரூ.8 லட்சத்தில் வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் காம்பேக்ட் எஸ்யூவி?

ரூ.10 லட்சத்திற்குள் புதிய எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. ஸ்கோடா கைலாக் எஸ்யூவியின் அடிப்படையில் தயாராகி வரும் இந்த புதிய எஸ்யூவிக்காக ரூ.275 கோடியை அந்நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.

குறைவான விலை புதிய ஏத்தர் ஸ்கூட்டர் குறித்து கசிந்த முக்கியத

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டர் வரும் 29ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புதிய ஸ்கூட்டரின் பேட்டரி, வேரியண்ட்டுகள் குறித்த பல முக்கியத் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

பாரத்பென்ஸ் பஸ், டிரக்குகளுக்காக தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி

சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில், பாரத்பென்ஸ் பஸ், டிரக்குகளின் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழ்நாட்டில் புதிதாக ரூ.4,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக டெய்ம்லர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முதலீடு செய்யப்பட உள்ளது.
Advertisement

ஊபர், ராபிடோ நிறுவனங்கள் இணைப்பு பேச்சுவார்த்தை தோல்வி!

இந்தியாவின் டாக்ஸி போக்குவரத்தில் முக்கிய நிறுவனங்களாக இருக்கும் உபர் மற்றும் ராபிடோ நிறுவனங்களை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இரதரப்புக்கும் இடையிலான சில முரண்பாடுகள் காரணமாக எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது.

E20 தரம்.. மாருதி, டாடா, மஹிந்திரா கடிதங்களில் வெளியான தகவல்

மாருதி, டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் பொதுவெளியில் E20 பெட்ரோலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த மூன்று நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் E20 பெட்ரோலின் தரத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து கவலையை பகிர்ந்து கொண்டது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் விசாரணை மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டாடா மோட்டார்ஸை தூக்கி நிறுத்தியதில் சந்திரசேகரனின் பங்கு!

நாட்டின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்த என்.சந்திரசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி 20ந் தேதியுடன் சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரது இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது.

30 ஸ்மார்ட் வசதிகளுடன் புதிய ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் சந்தைப் போட்டி அதிகரித்து வரும் நிலையில், கார்களில் வழங்கப்படுவது போன்ற கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் ஆம்பியர் மேக்னஸ் ஜி மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.09 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.
Advertisement

சத்தமில்லாமல் வாகன சாம்ராஜ்யத்தை அமைக்கும் ஜேஎஸ்டபிள்யூ!!

டாடா, மஹிந்திரா உள்ளிட்ட உள்நாட்டு கார் நிறுவனங்களை தொடர்ந்து மிகப்பெரிய வர்த்தக திட்டங்களுடன் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சத்தமில்லாமல் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இரும்பு, எரிசக்தி, கட்டுமானத் துறையில் புகழ்பெற்ற ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தனது முழுமையான கவனத்தை தற்போது ஆட்டோமொபைல் துறை மீது செலுத்தி வருகிறது.

நாளை அறிமுகமாகிறது ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக்..முக்கிய விபர

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ என் பிக்கப் டிரக் நாளை (ஆகஸ்ட் 14) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை உறுதி செய்யும் விதத்தில் டீசர் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் மூலமாக புதிய ஸ்கார்ப்பியோ என் பிக்கப் டிரக்கின் சில முக்கிய டிசைன் அம்சங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

ரூ.31,999 கொடுத்தால் டொயோட்டா ஹைரைடருக்கு ஸ்பெஷல் லுக்!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு டொயோட்டா ஹைரைடர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு வண்ணத்திலான காரில் சில அலங்கார விஷயங்களும் சேர்க்கப்பட்டு ஏரோ பிளாக் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. இந்த விஷேச பதிப்புக்கு காரின் விலையுடன் கூடுதலாக ரூ.31,999 விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சத்தில் புதிய யமஹா ஆர்2 பைக்... புக்கிங் துவங்கியது

இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய யமஹா ஆர்2 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ரூ.10,000 செலுத்தி டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
Advertisement

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் கலக்கிய நிறுவனங்கள்!

கடந்த மாதம் இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஜூலையில் மின்சார இருசக்கர வாகனங்களின் சில்லறை விற்பனையானது 2 லட்சம் யூனிட்டுகளை கடந்து புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இந்திய வாகன டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மாதத்தில் 2,04,362 மின்சார இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.