உங்க கார் உள்ள கூவம் மாதிரி நாத்தம் வருதா? 

Keep Your Car Smelling Fresh: சவாலான இந்திய காலநிலையிலும், உங்கள் காரில் புதிய மற்றும் இனிமையான வாசனையை பராமரிக்க எளிய மற்றும் பயனுள்ள வழிகளைக் கண்டறியவும். துர்நாற்றத்தைத் தடுக்கவும், சிறந்த ஓட்டுநர் அனுபவத்தை உறுதிப்படுத்தவும் எங்கள் உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.

சன்ரூஃப் பின்னாடி இவ்வளவு ரகசியம் இருக்குதா? இதை படிங்க முதல்ல! 

Sunroof Maintance Tips| உங்கள் காரின் சன்ரூப்பின் செயல்திறனை எவ்வாறு பராமரிப்பது மற்றும் மேம்படுத்துவது என்பதை அறிக. வழக்கமான சுத்தம், உயவு மற்றும் தொழில்முறை ஆய்வு ஆகியவற்றின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள். இந்த உதவிக்குறிப்புகளுடன் சிக்கல்களைத் தடுக்கவும் மற்றும் நீண்ட ஆயுளை உறுதிப்படுத்தவும்.

3,500 கோடி ரூபாயை கொட்ட போகும் டிவிஎஸ் நிறுவனம்!

இந்தியாவை சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்று டிவிஎஸ் (TVS). தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு டிவிஎஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தற்போது இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது.

மாருதி எர்டிகா காரை வாங்குறவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

கியா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பல புதிய கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், சொரெண்டோ ஆகும். 7 பேர் அமரக்கூடிய எஸ்யூவி வகை காராக விளங்கும் சொரெண்டோ இந்திய சாலைகளில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு சொரெண்டோ கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement

அம்பானியிடம் கார் வாங்க போகிறாரா ஹர்திக் பாண்ட்யா?

ஹர்திக் பாண்ட்யா சில மாதங்களுக்கு முன் ஃபெராரி 12சிலிண்ட்ரி காரை வாங்கியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில் தற்போது அந்த ஃபெராரி காரில் தனது காதலி உடன் பொது வெளியில் காட்சித் தந்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா இவ்வாறு தனது ஃபெராரி காரை வெளியே கொண்டுவந்ததற்கும் அம்பானி குடும்பத்திற்கும் சம்பந்தம் உள்ளது. அது என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவிற்கு புதிய ஹோண்டா சப்-காம்பேக்ட் எஸ்யூவி விரைவில்

இந்திய ஆட்டோமொபைல் சந்தை கொஞ்சம் தந்திரம் நிறைந்தது. நேரடியாக இதைத் தான் இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. சிறப்பான ஒரு கார் வேண்டும், மனநிறைவான வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும், குறைவான விலையைக் கொண்டிருக்க வேண்டும் ஆனால் மலிவான தயாரிப்பாக இருக்கக்கூடாது. இதனை இந்தியாவில் வெற்றிகரமாகப் புரிந்து கொண்ட நிறுவனங்கள் சில தான்.

ரெனோ டஸ்டர் அடிப்படை வேரியன்டை வாங்கலாமா?

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி மாடல் என்றால் அது ரெனோவின் டஸ்டர் தான். இந்தியாவில் மிகவும் குறைவாக இருக்கும் தங்களின் விற்பனையை மீட்டெடுக்கும் முயற்சியில் டஸ்டர் எஸ்யூவி காரை சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம். இந்தக் காரின் அடிப்படையான வசதிகள் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கின்றனவா, அதனை வாங்கலாமா என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தைக்கான தனது எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்பை ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் வெகு சமீபத்தில் வெளியிட்டது. இதில், ஏராளமான கார்கள், இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இருப்பினும் ஒரு கார் மட்டும், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை வெகுவாக அதிகரிக்க செய்துள்ளது.
Advertisement

வெறும் 6 லட்ச ரூபாயில் கிடைக்கும் ஹூண்டாய் எஸ்யூவி கார்!

ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் கார்கள் விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 49% அதிகரித்துள்ளது. அந்த அளவிற்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் எத்தனை எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், ஹூண்டாயின் இந்த மைக்ரோ-எஸ்யூவி வகையை சேர்ந்த காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

5 பேர் மிகவும் சௌகரியமாக செல்வதற்கு ஃபோக்ஸ்வேகன் கார்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கார்கள் விற்பனையில் கவனிக்கத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதற்கு ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், டைகுன் கார்களின் விற்பனை ஆனது கடந்த மார்ச் மாதத்தை காட்டிலும் சுமார் 70% அதிகரித்துள்ளது. இது எப்படி சாத்தியமானது, டைகுன் காரின் சிறப்பம்சங்கள் என்ன என்கிற கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

BYD கார்கள் இந்தியாவில் மீண்டும் விலை உயர்வு

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக சீனாவைச் சேர்ந்த BYD இருந்து வருகிறது. இதனை முக்கியமான நிறுவனங்களில் ஒன்று என்று கூறுவதற்கான காரணம், சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டெல்லாவுடன் இந்நிறுவனம் போட்டியிட்டு வருவது தான். சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களை அதே தரத்திலேயே இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறது BYD.

சன்ரூஃப் உடன் இதைவிட குறைந்த விலையில் கார் இல்ல...!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபலமான நெக்ஸான் காரில் குறைந்த விலையில் பனோராமிக் சன்ரூஃப்-ஐ வழங்கும் விதமாக 'ப்யூர்+ PS' என்கிற புதிய வேரியண்ட்டை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், நெக்ஸானின் புதிய ப்யூர்+ PS வேரியண்ட்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ள படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் முன் செக் செய்ய வேண்டியவை

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இப்போது மக்களின் முதன்மை வாகனமாக மாறி வருகின்றன. இது வரை எரிபொருள் ஸ்கூட்டர்களையே பயன்படுத்தி வந்த பலரும் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க முன்வருவதைப் பார்க்க முடிகிறது. எரிபொருள் ஸ்கூட்டர்கள் பல ஆண்டுகளாக விற்பனையில் இருப்பதால் எந்த ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்பதில் நம்மிடம் ஒரு தெளிவு இருக்கிறது. ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அப்படி இல்லை.

7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காருக்கு BaaS திட்டம் அறிமுகம்

இந்தியாவில் தற்போது கேரன்ஸ் கிளாவிஸ் EV என்ற ஒரேயொரு மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே கியா இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. மூன்று வரிசைகளாக 6/7 சீட்கள் கொண்ட கார் மாடலாக இந்த கேரன்ஸ் கிளாவிஸ் EV இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கொஞ்சம் ப்ரீமியமாக 18 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையை இந்த எலெக்ட்ரிக் எம்பிவி கார் கொண்டிருக்கிறது.

பிசியான சாலையில் சுற்றித் திரிந்த சீன எலெக்ட்ரிக் கார்!

சீனாவில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார் ஒன்று நம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சாலைகளில் சுற்றித் திரிந்துள்ளது. இந்த எந்த கார் என்பதை யாரும் அடையாளம் கண்டுவிட கூடாது என்பதற்காக முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இந்த சீன கார் இந்திய சாலைகளில் ஓட்டிப் பார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், எங்களது கண்ணில் இருந்து தப்புமா? வாருங்கள் இந்த சீன எலெக்ட்ரிக் கார் என்ன என்பதை இந்த தொகுப்பில் அக்குவேர் ஆணிவேராக பார்ப்போம்.

அதிக மைலேஜ் தரக்கூடிய எஸ்யூவியை விரைவில் வெளியிடும் ஹோண்டா

அடுத்த சில வாரங்களில் ஹோண்டாவின் ப்ரீமியம் எஸ்யூவியை இந்தியாவில் நீங்கள் வாங்க முடியும். நீண்ட காலமாக இந்தியாவில் செயல்பாட்டில் இல்லாதது போலான ஒரு நிலையையே ஹோண்டா கொண்டிருக்கிறது. புதிய தயாரிப்புகள் எதுவும் வெளிாவதில்லை, அப்டேட்களும் கடமைக்கென்று செய்யப்படுவது போல ஒரு உணர்வு ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது. அவற்றையெல்லாம் களைந்து ஃப்ரஷ்ஷாக புதிய தொடக்கத்துடன் இந்தியாவில் மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது ஹோண்டா.
Advertisement

27.8கிமீ மைலேஜ் தரும் புதிய டாடா CNG காரை எதற்காக வாங்கனும்?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் பிரபலமான அல்ட்ராஸ் (Altroz) காரில் புதியதாக சிஎன்ஜி-ஏஎம்டி (CNG-AMT) தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி காரில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், புதியதாக ஏஎம்டி ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அல்ட்ராஸ் சிஎன்ஜி ஏஎம்டி காரின் முக்கியமான சிறப்பம்சங்கள் என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துகிறதா மத்திய அரசு?

நான்கு மாநில தேர்ந்தல்கள் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படலாம் என பலரும் கூறி வருகின்றன. இந்த நிலையில் இந்தத் தகவலை கிட்டத்தட்ட உண்மை என நிரூபிக்கும் விதமான மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது கவனத்தைப் பெற்றிருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியே இது குறித்த கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

காரின் மைலேஜை குறைக்கும் புதிய சோதனை முறை விரைவில் அறிமுகம்

இந்தியர்கள் ஒரு காரை வாங்கும் போது எதைப் பார்க்கிறார்களோ இல்லையோ, எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதனை கண்டிப்பாகப் பார்ப்பார்கள். ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுகிறது என்ற அளவு நிறைய குடும்பங்களில் காரின் மைலேஜைக் பொறுத்தும் இருக்கிறது. இந்த நிலையில் இனி ஒரு காரினை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் குறைவான மைலேஜ் கொண்டாகவே அது இருக்கும். ஏன் தெரியுமா?

27கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரை வாங்க குவியும் மக்கள்!

டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் காராக இன்னோவா (Innova) உள்ளது. அதற்கு அடுத்த நிலையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) உள்ளது. முன்னதாக, இன்னோவாவிற்கும், ஹைரைடருக்கும் இடையே விற்பனையில் பெரிய வித்தியாசம் இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனையில் இன்னோவாவை ஹைரைடர் மிகவும் நெருங்கியுள்ளது.
Advertisement

இந்தியாவில் மாருதி வெளியிடும் 4 புதிய எஸ்யூவிக்கள் இவை தான்

இப்போதைக்கு இந்தியாவில் எஸ்யூவிக்களின் மீதான மோகம் குறையாது என்றே தெரிகிறது. எனவே இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி நான்கு புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட எஸ்யூவிக்களை வெளியிடத் தயாராகி வருகிறது. மாருதி புதிதாக உருவாக்கி வரும் இந்த நான்கு எஸ்யூவிக்கள் எவை எவை என்று பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த கம்பெனியில் வாங்குவதுனு குழப்பமா?

பெட்ரோல் ஸ்கூட்டர்கள் போய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) வந்ததை போல, ஸ்கூட்டரை மைலேஜ் (Mileage) பார்த்து வாங்கிய காலம் போய் ரேஞ்ச் (Range) மற்றும் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களை பார்த்து வாங்க ஆரம்பித்துள்ளோம். பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக ஏத்தர் எனர்ஜி, ஓலா போன்ற ஸ்டார்ட்-அப் இவி நிறுவனங்களும் சிறந்த சாஃப்ட்வேர் உடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்குகின்றன.

ஹைட்ரஜன் இன்ஜின் உடன் விற்பனைக்கு வர போகும் மாருதி ஸ்விஃப்ட்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ஆட்டோ கார் இந்தியா தளத்தில் வெளியாகியுள்ளது.

ஏத்தர் ஸ்கூட்டரை திருடிட்டு எங்கேயும் ஓடிட முடியாது!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்துவதற்காக 'ஏத்தர் ஸ்டேக் 7' (Ather Stack 7) என்கிற அதிநவீன மென்பொருளை உருவாக்கி உள்ளது. விற்பனையில் உள்ள ஒவ்வொரு ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் படிப்படியாக வழங்கப்பட உள்ள ஏத்தரின் இந்த புதிய சாஃப்ட்வேர் (Software)-ஐ பற்றியும், இதன் மூலமாக ஏத்தர் வாகனங்களில் கிடைக்கப்பெற உள்ள வசதிகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

கியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் இது தான்

கியாவிடம் (Kia) இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் காரான சிராஸ் EV (Syros EV) ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் கியா வெளியிடலாம் எனத் கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியீடு குறித்த தகவல் கசிந்திருக்கிறது.